×

சிலைக்கு திமுக, அதிமுகவினர் மாலை அணிவிப்பு அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

அரியலூர், பிப்.4: அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் தரேஸ்அகமது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கலெக்டர் ரத்னா உடனிருந்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம் நிர்வாக இயக்குநர் டாக்டர் தரேஸ் அஹமது ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை வகித்தார். அதன்படி, அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திடீர்குப்பம் பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ஒரு வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். திருமானூர் நாதகுளம் வடக்கு வீதியில் வருவாய்த்துறையின் மூலம் இலவச பட்டா வழங்குவது தொடர்பாக அங்கு வசித்து வரும் நபர்களிடம் கேட்டறிந்தார்.

கீழகொளத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை ஏரியில் கரைகளை பலப்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்து, அக்குளக்கரையின் அருகில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன்குட்டையை பார்வையிட்டு மீன்வளர்ப்பு தொழில்குறித்தும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளி மாணவிகளுக்கான விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு மாணவிகளிடம் உணவின் தரம் குறித்தும், மாணவிகளின் கல்வி தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளின் நலனுக்காக விடுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் அரசு விடுதிகளில் தங்கி பயிலும் அனைத்து மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைவரும் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், அவர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சிகளை வழங்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முன்னிலையில் அனைத்துத்துறைகளின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தகுதியான நபர்கள் முழுமையாக பயனடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா; ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை) சுந்தர்ராஜன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஏழுமலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலா; ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மெரினா, வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : DMK ,evening parade ,AIADMK ,Ariyalur district ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...