சென்னை : செமி கண்டக்டர் துறையில் மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் சென்னையில் செமி கண்டக்டர் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கே.எல்.ஏ.கார்ப்பரேஷன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3000 கோடி முதலீடு செய்கிறது. ரூ.3,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள மையத்தின் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
