×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா

*திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ராணிப்பேட்டை : இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் நேற்று கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் (உயிர்ப்பு) பெருவிழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு நடந்த ஈஸ்டர் பெருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டு உயிர்த்த இயேசுவை தண்டனிட்டு சென்றனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நள்ளிரவு ஈஸ்டர் பெருவிழா வாணவேடிக்கையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் பெருவிழா திருப்பலி பூஜையை ஆலய பங்குத்தந்தை லியோ மரிய ஜோசப் தலைமையில் சிறப்பு விருந்தினர் திருச்சி சேவியர் லாரன்ஸ் மற்றும் லொயோலா தொழிற்பயிற்சி நிலைய இயக்குனர் தந்தை ரோச் ஆகியோர் சிறப்பு ஈஸ்டர் பெருவிழா பாடல் திருப்பலி பூஜையை நடத்தினார்கள்.

விழாவில் ராணிப்பேட்டை வாலாஜா கொண்ட குப்பம் அவரைக்கரை, காரை, அம்மூர், லாலாப்பேட்டை, வாலாஜா, அணைக்கட்டு, ஆற்காடு, சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் நிகழ்வானது மிகச் சிறப்பாக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல் ராணிப்பேட்டை சிஎஸ்ஐ தூய மரியாள் ஆலயம், சிப்காட் புனித தோமையார் ஆலயம், பெல் மற்றும் ஆற்காடு புனித அந்தோனியார் ஆலயங்கள், வாலாஜா சிஎஸ்ஐ ஆலயம், பாரதி நகர் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Easter ,Ranipet district ,Ranipet ,Christians ,Jesus Christ ,Holy Mother of Health Church ,Ranipet… ,
× RELATED குந்தா அணையில் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு