×

முறைகேடு செய்யும் கட்டுமான நிறுவனங்களுக்கே ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் சாதகமாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி

டெல்லி :முறைகேடு செய்யும் கட்டுமான நிறுவனங்களுக்கே ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் சாதகமாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் RERA அலுவலகத்தை ஷிம்லாவிலிருந்து தர்மசாலாவுக்கு மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், “RERA அலுவலகங்களால் மக்களுக்கு எப்பயனும் இல்லை. அமைப்பை கலைத்தால் கூட எங்களுக்கு கவலையில்லை. இதன் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது,” இவ்வாறு தெரிவித்துள்ளது.

Tags : Supreme Court ,Real Estate Regulatory Commission ,DELHI ,RERA ,Himachal Pradesh ,Shimla ,Dharmasala ,
× RELATED அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!!