×

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் மன்னார்குடி கல்லூரி மாணவிகள் சாதனை

மன்னார்குடி, பிப். 13: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒன்றிய அளவில் நடத்தப்பட்ட முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவில் மன்னார்குடி பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் கபடி, ஓட்டப் பந்தயம் மற்றும் கயறு இழுத்தல் போட்டிகளில் முதலிடமும், குண்டு எறிதலில் இரண்டாமிடமும், எறி பந்தில் முன்றாமிடமும் பெற்றனர்.

அதுபோல், மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் கபடி மற்றும் ஓட்டபந்தயத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செயலாளர் அம்புரோஸ் மேரி, கல்லூரி முதல்வர் காயத்ரி, கபடி பயிற்சியாளர் வேலுமணி, விளையாட்டுத் துறை பேராசிரியர்கள் சுஜா, சிவரஞ்சனி ஆகியோர் பங்கேற்று ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினர்.

 

Tags : Mannargudi College ,Mannargudi ,Chief Minister ,Youth Sports Festival ,Tamil Nadu Sports Development Authority ,Mannargudi Pancheckers Girls' College ,
× RELATED ராஜபாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்