×

தமிழக- கேரள எல்லை பகுதியான கம்பம், போடிமெட்டுக்கு நாளை முதல் பஸ்கள் இயக்கம்

கம்பம், பிப். 4:  கொரோனோ ஊரடங்கு தளர்வால் கேரளாவுக்கு வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடைத்தும் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டுக்கு அரசு- தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. பின்னர் ஜன.6 முதல் குமுளிக்கு பஸ்களை இயக்க தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அனுமதி வழங்கினார். அன்று முதல் எல்லையான குமுளிக்கு மட்டும் பஸ்கள் சென்று வருகிறது. மற்ற பகுதிகளான கம்பம்மெட்டு, போடிமெட்டுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் அன்றாட ஏலத்தோட்ட, விவசாய தொழிலாளர்கள் ஜீப், ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதிக்கு பஸ்கள் இயக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கம்பம்மெட்டு, போடிமெட்டுக்கு பலமாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. பல மாததங்களுக்கு பின் இப்பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் தொழிலாளர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் கணேசன் கூறுகையில், ‘பொதுமக்களின் வசதிக்காக நாள் ஒன்றுக்கு எத்தனை முறை பஸ்களை இயக்குவது எனபது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்’ என்றார்.

Tags : border ,Bodimettu ,Kambam ,Kerala ,Tamil Nadu ,
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...