×

மாயமான பிளஸ் 1 மாணவி கர்ப்பமாக மீட்பு மெக்கானிக் போக்சோவில் கைது ஆரணி அருகே 2 மாதங்களுக்கு முன்பு

ஆரணி, பிப்.4: ஆரணி அருகே 2 மாதங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக்கை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் எங்கு தேடியும் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை களம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், மாணவியை காதலித்து வந்த ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் வேலை செய்யும் கன்னியப்பன் மகன் கவியரசன்(26) என்பவர் தனது உறவினர்கள் உதவியுடன் அவரை காரில் கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மாணவியை கடத்துவதற்கு உதவிய கவியரசனின் உறவினர்களான நாகராஜ், மகேந்திரன் மற்றும் நண்பரான கார் டிரைவர் பாபு ஆகிய 3 பேரையும் போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். மேலும், மாணவியையும் அவரை கடத்திச்சென்ற கவியரசனையும் தேடிவந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு, பெங்களூருவில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பெங்களூருக்கு சென்று இருவரையும் ஊருக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் மாணவி 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கவியரசனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர். மேலும், மாணவியை திருவண்ணாமலை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Magical Plus 1 ,student ,mechanic ,Arani ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...