×

எருது விடும் விழாவில் சிறுவன் காயம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி, பிப்.4: பர்கூர்  ஒன்றியம், வரட்டனப்பள்ளியில் நடந்த எருதாட்டத்தில் காளை  முட்டியதால் காயமடைந்த சிறுவனை, அழைத்து செல்ல காலதாமதமாக  வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் மீது தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பர்கூர்  ஒன்றியம், வரட்டனப்பள்ளியில் நேற்று நடந்த எருது விடும் விழாவினை காண  ஏராளமானோர் கூடினர். அப்போது ஒரு காளை முட்டியதில், வரட்டனப்பள்ளி மேல்  தெருவை சேர்ந்த லோகேஷ்(15) என்ற சிறுவன் காயமடைந்தான். அவனை அழைத்து செல்ல  108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆம்புலன்ஸ் வர  காலதாமதம் ஆனதால், காயமடைந்த சிறுவனை பொதுமக்கள் மீட்டு போலீஸ் வாகனத்தில்  அனுப்பி வைத்தனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால்,  அங்கிருந்த சிலர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கினர். இதில் பக்கவாட்டில்  இருந்த கண்ணாடி உடைந்தது. மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் சின்ராயன்(40)  என்பவரையும் சிலர் தாக்கினர். இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்த போலீசார்  மீட்டு சிகிச்சைக்காக ஒரப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி  வைத்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : bullfighting attack ,ambulance staff ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்