×

ராகுல்காந்தி குற்றச்சாட்டு எதிரொலி எப்ஸ்டீனை 3-4 முறை சந்தித்தது உண்மை: ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்

புதுடெல்லி: ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தும், எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்தும் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: ராகுல்காந்தி கூறுவது கோமாளித்தனமான குற்றச்சாட்டு. 2014-15 கால கட்டத்தில் நான் சர்வசேத அமைதி கழக ஆணையத்தின் செயலாளராக பணியாற்றிய போது எப்ஸ்டீனை சந்தித்தேன். அவரை நான் ஒரு குழுவாகத்தான் சந்தித்தேன். அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை சந்தித்துள்ளேன். 2014 ஆம் ஆண்டு லிங்க்ட்இன் நிறுவனர் ரீட் ஹாப்மேன் இந்தியா வருவது குறித்து எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்தது. எப்ஸ்டீன் மற்றும் ஐபிஎல் தலைவர் டெர்ஜே ரோட் லார்சன் ஆகியோர் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில் என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படிக்க வேண்டும். அவர்களது சட்டவிரோத செயல்களுக்கு நான் ஒத்துழைக்காததால் தான் அவர்கள் என்னை பிடிக்காமல் அவ்வாறு கூறினார்கள். ஏனெனில் எப்ஸ்டீனின் செயல்பாடுகளில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களுக்கு சரியான நபர் அல்ல. நாங்கள் மேக் இன் இந்தியா பற்றிப் பேசினோம்’ என்றாா்.

Tags : Rahul Gandhi ,Epstein ,Union Minister ,New Delhi ,Union ,Petroleum Minister ,Hardeep Singh Puri ,Sarveshetha Peace League… ,
× RELATED இந்தியக் காப்பீட்டுத் துறையில் இனி 100%...