×

கிருஷ்ணகிரியில் திமுக வழக்கறிஞர் இல்ல திருமண விழா

பாலக்கோடு, பிப்.4: தர்மபுரி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முருகன்-அமுதவள்ளி தம்பதியின் மகள் ராகப்பிரியாவிற்கும், திருப்பதி-லட்சுமி தம்பதியின் மகன் சதீஷ்குமார் ஆகியோரது திருமணம், கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நடந்தது. இதில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில், தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாதையன், சூடப்பட்டி சுப்பிரமணி முரளி, வழக்கறிஞர் மணி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கோபால், குமரவேல், குட்டி, தொழிலதிபர் மனோகரன், மாரவாடி முருகன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திகேயன், முத்துராஜ், மாணவர் அணி மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,lawyer house wedding ,Krishnagiri ,
× RELATED முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக எம்எல்ஏக்கள்