×

குடைமிளகாய் கெட்டி சட்னி

தேவையான பொருட்கள்:

*எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
*கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
*வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
*பச்சை மிளகாய் -2
*சிறிய குடைமிளகாய் நறுக்கியது
*இஞ்சி 112 இன்ச்
*புளி – சிறிய துண்டு
*கொத்தமல்லி கையளவு
*துருவிய தேங்காய் -1/4 கப்
*உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி, புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு கொத்தமல்லி மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, நீரை அதிகம் ஊற்றி விடாமல், கெட்டி சட்னி பதத்திற்கு அளவாக ஜாரில் நீர் சேர்த்து கலந்து ஊற்றி கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.

Tags :
× RELATED தேங்காய்ப்பால் இனிப்பு போண்டா