தேவையான பொருட்கள்:
* எலும்பில்லா நாட்டுக்கோழி 50 கிராம்
* சாமை சாதம் 2 டீஸ்பூன்
* பூண்டு 1 பல் (மசித்தது)
* மஞ்சள் ஒரு சிட்டிகை
* நெய் ½ டீஸ்பூன்
* மிளகு தூள் – ஒரு சிட்டிகை
* சீரகதூள் – ஒரு சிட்டிகை
* தண்ணீர் தேவையான அளவு
* உப்பு மிகக் குறைவு (1½ வயதுக்கு மேல்)
செய்முறை:
கோழி, சாதம், பூண்டு, மஞ்சள் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
முழுவதும் மசிக்கவும். அதில் மிளகு தூள், சீரக தூள் மற்றும் நெய் சேர்த்து கலக்கவும். உப்பு சேர்த்து கொடுக்கவும். குழந்தைக்கு ஏற்ற சத்தான கஞ்சி தயார்.
மருத்துவ பயன்கள்:
சாமை (Little Millet) அரிசி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், மலச்சிக்கலைப் போக்குதல், உடல் வெப்பத்தைச் சமநிலைப்படுத்துதல் போன்ற பல ஆரோக்கியப் பலன்களைக் கொண்டது; இதில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, சர்க்கரை நோயாளிகள், உடல் எடை குறைப்பவர்கள், செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது. குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றது. சை வளர்ச்சி புரதம் , இரும்புச் சத்து நிறைந்தது. இந்தக் கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும், மேலும் மூளை வளர்ச்சிக்கும் நல்ல பலன் கொடுக்கும். இதனை சிக்கன் குறைவாக சேர்த்து உடல் எடை குறைப்போரும் அருந்தலாம்.
