×

பச்சை மஞ்சள் இஞ்சி மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்

பச்சை மஞ்சள் தூள் 2 துண்டு (பொங்கல் பானைக்கு கட்டிய மஞ்சள்)
பச்சை மாங்காய் 1 (சிறிய துண்டு
களாக நறுக்கியது)
இஞ்சி 12 டீஸ்பூன் (நறுக்கியது / அரைத்தது)
புளி சிறிது (தண்ணீரில் கரைத்தது)
வெல்லம் தேவையான அளவு (பொடி செய்தது)
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் 1 டீஸ்பூன்
கடுகு ½ டீஸ்பூன்
உலர்ந்த மிளகாய் 1
கறிவேப்பிலை சிறிது.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகள், இஞ்சி, பச்சை மஞ்சள் தூள் , உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மாங்காய் மிருதுவாக வேகும் வரை கொதிக்க விடவும். மாங்காய் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து 23 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் வெல்லம் சேர்த்து நன்றாக கரைய விடவும். சுவை சமநிலையைப் (புளிப்பு இனிப்புகாரம்) பார்த்து சரி செய்யவும். வேறு ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உலர்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சடியில் ஊற்றவும். நன்றாக கிளறி இறக்கவும். பச்சை மஞ்சள் வாசனையுடன் பச்சடி கமகமக்கும்.

குறிப்பு

சாதம், தயிர் சாதம் அல்லது சாப்பாட்டுடன் சாப்பிட வேண்டுமென்றால் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து காரம் அதிகப்படுத்தலாம்.

பச்சை மஞ்சள் (Raw Turmeric) பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பச்சை மஞ்சளில் உள்ள குர்குமின் உடலை நோய்களிலிருந்து காக்க உதவுகிறது.
அழற்சி குறைக்கும்.
உடல் வலி, வீக்கம், மூட்டு வலி
போன்றவற்றை குறைக்க உதவும்.
ஜீரணம் மேம்படும்.
வயிற்று உப்புசம், அமிலத்தன்மை, அஜீரணம் போன்றவற்றிற்கு நல்லது.

ரத்த சுத்திகரிப்பு

ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல் பிரச்னைகள் (பிம்பிள், அலர்ஜி) குறைய உதவும்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்

இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது (அளவோடு பயன்படுத்த வேண்டும்).

கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரலை பாதுகாக்கவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
காயம் ஆற உதவும்.
பச்சை மஞ்சள் கிருமி நாசினியாக செயல்பட்டு காயங்கள் சீக்கிரம் ஆற உதவும்.
பெண்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மாதவிடாய் கால வலி, ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது.
சளி, இருமல் குறைக்கும்.
பச்சை மஞ்சளை தேன் அல்லது பால் சேர்த்து எடுத்தால் சளி குறையும்.

புற்றுநோய் தடுப்பு பண்பு

எதிர் ஆக்ஸிடண்ட் தன்மை காரணமாக செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. பொங்கல் பண்டிகை நாட்களில் மட்டுமே கிடைக்கும். இந்த பச்சை மஞ்சளை இப்படியும் பயன்படுத்தலாம்.

கவனம்:

அதிக அளவில் எடுத்தால் வயிற்று எரிச்சல் ஏற்படலாம்.
கர்ப்பிணிகள் மற்றும் கல்லீரல்/பித்தப்பை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்.

– ஹேமலதா வாசுதேவன்.

Tags :
× RELATED இஞ்சி இலை சர்பத்