×

நாய் குரைத்ததை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு: அண்ணன், தம்பி கைது

 

ராஜபாளையம், பிப்.11: ராஜபாளையம் அருகே, நாய் குரைத்ததை தட்டி கேட்ட வாலிபரை வெட்டிய வழக்கில், சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணபதி சுந்தர நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்த ராமசுந்தரம் என்பவரது மகன்கள் ஈஸ்வரன்(24) மற்றும் தளபதி(22). இருவரும் கீரை பறிப்பதற்காக தங்களது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் இருந்த ஆடுகளை பார்த்து நாய் குரைத்ததால் ஆடுகள் மிரண்டன. இதனை கண்ட அங்கிருந்த ராம்குமார்(24) என்பவர், இதனை தட்டிக்கேட்ட போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சகோதர்கள் இருவரும், தங்கள் கைகளில் வைத்திருந்த அரிவாளால், ராம்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராம்குமார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர், சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சகோதரர்களான ஈஸ்வரன் மற்றும் தளபதியை கைது செய்தனர்.

Tags : Rajapalayam ,Ramasundaram ,Ganapathi Sundara Nachiyarpuram ,Virudhunagar district ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...