×

மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

மார்த்தாண்டம், பிப்.11: மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (25). சம்பவத்தன்று பைக்கில் ஞாறாம்விளைக்கு மார்த்தாண்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் மருத்துவமனை அருகில் வந்த போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று பைக்கில் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பிரசாந்த் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்தது யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Martandam ,MARTHANDAM ,PRASANT ,TIKKURICHI AREA ,Marthandam Road ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்