நாகர்கோவில், பிப். 11: நாகர்கோவில் மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட பள்ளவிளை கோல்டன் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி செலவில் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சி லதா, கவுன்சிலர் அருள் சபிதா, உதவி பொறியாளர் பிருந்தா, தொழில்நுட்ப அலுவலர் நிஷ்மா, திமுக பொருளாளர் கேட்சன், பகுதி செயலாளர் ஷேக்மீரான், நிர்வாகிகள் ராஜன், வின்சென்ட், சவரிமுத்து, பாபுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
