- கடலூர்
- பரத்குமார்
- செந்தில்குமார்
- வண்ணாரப்பேட்டை
- நெல்லிக்குப்பம்
- பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை
கடலூர், பிப். 11: நெல்லிக்குப்பம் அடுத்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் பரத்குமார்(22). கடந்த 2024 ஜூலை 28ம் தேதி இவரது வீட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்து தஞ்சாவூர் இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார். இதில், பரத்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
