×

சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை, பிப். 11: சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவு: கோட்டூர்புரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த்குமார், பெருநகர சென்னை காவல்துறை உளவுப்பிரிவுக்கும், காத்திருப்பு பட்டியலில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் தகிரா, வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கும், தர்மராஜ் கொடுங்கையூர் குற்றப்பிரிவுக்கும், லில்லி துறைமுகம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், சந்திரசேகரன், எம்.கே.பி நகர் சட்டம் ஒழுங்கிற்கும், காளிராஜ் ஆர்.கே.நகர் சட்டம் ஒழுங்கிற்கும், லதா மகேஸ்வரி உயர்நீதிமன்றம் சட்டம் ஒழுங்கிற்கும், பாஸ்கர் கோட்டூர்புரம் சட்டம் ஒழுங்கிற்கும், பிரவீன் குமார் அயனாவரம் சட்டம் ஒழுங்கிற்கும், கோடிராஜ் நீலாங்கரை சட்டம் ஒழுங்கிற்கும், ரோகிணி கோயம்பேடு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், வானமாமலை ராஜமங்கலம் சட்டம் ஒழுங்கிற்கும், கிருஷ்ணகுமார் வடபழனி குற்றப்பிரிவுக்கும் என சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Arun ,Chennai ,Koturpuram ,Anand Kumar ,Metropolitan Chennai Police Intelligence ,
× RELATED வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற தொன்மையான சிலைகள் மீட்பு : 4 பேர் கைது