×

தொப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

தர்மபுரி, பிப்.11: தொப்பூர் அருகே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்று மோட்டாரை போட சென்ற விவசாயி, கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த கானிகரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(61). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சிவகாமியுடன் தோட்டத்துக்கு பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது மின் மோட்டார் சுவிட்சை போட சென்றபோது, திடீரென கால் தவறி அருகில் இருந்த கிணற்றினுள் விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. ராஜேந்திரன் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய ராஜேந்திரனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Toppur ,Dharmapuri ,Rajendran ,Kanikaralli ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...