×

கல்லூரி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்

தர்மபுரி, பிப்.10: தர்மபுரி அருகே சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் தீபிகா(19). இவர் இங்குள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தாழிகளின் வீடுகளில் தேடியும் தீபிகா கிடைக்கவில்லை. இதுபற்றி பெற்றோர், கிருஷ்ணாபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர். அதே போல், கம்பைநல்லூர் மல்லியம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகள் கோமதி(16). இவர் கடத்தூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி, வீட்டில் இருந்த கோமதி திடீரென மாயமானார். உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு கோமதியை தேடி வருகின்றனர்.

Tags : Dharmapuri ,Deepika ,Subramani ,Chaulur ,
× RELATED ராஜபாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்