×

மயிலாடி எஸ்.எம். பள்ளி ஆண்டு விழா எஸ்.பி.ஸ்டாலின் பங்கேற்பு

அஞ்சுகிராமம், பிப்.10: மயிலாடி எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. தாளாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மாணவி ரேஷ்மா வரவேற்றார். பணி ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சுவாமிநாதன் முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக எஸ்பி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் மாதேஷ்க்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் இதய நிறைவு தியான மைய மாவட்டத் தொடர்பு அலுவலர் லோகநாதன், குமரி எப்.எம் 101 சுகுமார், சூழலியல் ஆராய்ச்சியாளர் சுதாமதி, ஆசிரியர் மலர்விழி மற்றும் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர். 2024-2025ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கும், 100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags : Mayiladi S. M. School Year Ceremony ,S. B. Stalin ,Anjukramam ,Mayiladi S. M. Metric High School Annual Festival ,Thaler Anand ,Reshma ,Natrajan ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்