×

வன்னியூரில் காங்கிரஸ் நடைபயணம்

மார்த்தாண்டம், பிப்.10: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம் நடைபெற்றது. வன்னியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேக்கோடு பகுதியில் இருந்து தொடங்கி செழுவஞ்சேரி, வன்னியூர், மஞ்சதோட்டம், பரக்குன்று, கூட்டமாவிளை வழியாக மலையடி ஊராட்சி தெற்றிகுழி பகுதி வரை நடைபயணம் நடைபெற்றது. தாரகை கத்பர்ட் எம்எல்ஏ தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர் ரவிசங்கர், வட்டார முன்னாள் தலைவர்கள் சதீஷ், மோகன்தாஸ், வன்னியூர் காங்கிரஸ் தலைவர் ரதீஷ், மலையடி காங்கிரஸ் தலைவர் புஷ்பாகரன், தலைவர் ஜிஜி, குஞ்சுமுத்து, ராஜேஷ், மதுசூதனன், சங்கரன் களியக்காவிளை டவுன் பஞ். தலைவர் சுரேஷ், களியக்காவிளை பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெனட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,march ,Vanniyur ,Marthandam ,BJP government ,Mekodu ,Chezhuvancheri ,Manjathottam ,Parakunnu ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் பூத்து குலுங்கும் செண்டி பூக்கள்