×

பஸ் மோதி டிரைவர் பலி

 

சிவகாசி, பிப்.10:சிவகாசி திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் நடராஜன்(45). இவர் கிரேன் டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று நடராஜன் தனது டூவீலரில் எரிச்சநத்தம்- சிவகாசி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காளையார்குறிச்சி அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தனியார் பள்ளி பஸ் டிரைவர் காட்டுராஜா(53) என்பவர் மீது திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sivakasi ,Natarajan ,Pandiannagar, Tiruthangal, Sivakasi ,Erichanatham-Sivakasi ,Kalaiyarkurichi ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...