×

கஞ்சா வியாபாரி கைது

 

ராஜபாளையம், பிப். 10: ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் பைக்குடன் நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் போலீசாருடன் அங்கு சென்றார். போலீசாரை கண்டதும் வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, முதுகுடி பகுதியை சேர்ந்த பாண்டியராஜ்(40) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 200 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags : Ganja ,Rajapalayam ,Rajapalayam Chathirapatti Road ,Sub-Inspector ,Selvam ,South Police Station ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...