- கூட்டணி
- தவேகா…
- Cholavandan
- புதிய தமிழரசுக் கட்சி
- ஆலங்கநல்லூர், மதுரை மாவட்டம்
- கிருஷ்ணசாமி
- ஷ்யாம் கிருஷ்ணசாமி
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் புதிய தமிழகம் கட்சியின் சோழவந்தான் தொகுதி அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். பின்னர் கிருஷ்ணசாமியிடம், ‘‘தேர்தலில் தவெக கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா’’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘நல்ல எண்ணத்தோடு கேள்வி கேளுங்கள்; கெட்ட எண்ணத்தோடு கேள்வி கேட்காதீர்கள்.
நல்ல வழியில் செல்வதற்கு வழிகாட்டுங்கள். யாரும் கெட்டுப் போவதற்கென தவறான பாதையில் செல்ல மாட்டார்கள்’’ என கிருஷ்ணசாமி சிரித்துக் கொண்டே பதிலளித்தார். தொடர்ந்து, ‘‘மதுரையில் மோடியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?’’ என கேட்டதற்கு, ‘‘உங்கள் ஆசை நிறைவேறட்டும். எதிர்பார்ப்பு நிச்சயம் நடக்கும்’’ என்றார்.
