- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- மகாகவி பாரதி நகர்
- கன்னடசன் நகர்
- பெரம்பூர்
- சென்னை வளர்ச்சி
- மகாகாவி
- பாரதி நகர்
பெரம்பூர்: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் சுமார் 0.76 ஏக்கர் பரப்பளவில் ரூ.5.35 கோடி செலவில் 10,637சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 2 கடைகள், 1 உணவகம், 2 நடைமேடைகள், 6 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு கூடம், நேரக் காப்பாளர் அறை, பாதுகாப்பு அறை, ஜெனரேட்டர் அறை, மூத்த குடிமக்களுக்கான பயணச்சீட்டு வழங்கும் மையம், போக்குவரத்து துறைக்கான டிக்கெட் கவுண்டர்கள், அலுவலகங்கள், பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் வடபழனி ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுபோல், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் சுமார் 1.31 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.26 கோடி செலவில் 5,834 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 4 கடைகள், 1 உணவகம், 2 நடைமேடைகள், 16 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சதுக்கம், தீவுத்திடல், ஐயப்பன்தாங்கல், தாம்பரம், கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. 11 தடங்களில், 94 பேருந்துகள், 538 புறப்பாடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இந்த பேருந்து நிலையம் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திறந்துவைத்து பேசினார்.
விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், எபிநேசர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு, பொறியாளர் அணி துணை செயலாளர் நரேந்திரன். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் காகர்லா உஷா, போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், முதன்மைச் செயலாளர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் த.பிரபுசங்கர், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
