×

குன்னம் – பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தட பேருந்து

 

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் குன்னம் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தட பேருந்து இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்துள்ளார். குன்னத்திலிருந்து தொழுதூர் வழியாக சென்னைக்கும் மற்றும் பெரம்பலூரிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய வழித்தடத்தின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகரன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குன்னம், வேப்பூர், ஒகளூர், ஆடுதுறை, லப்பைகுடிகாடு, தொழுதூர், பெரம்பலூர், விழுப்புரம் பகுதி வாழ் மக்கள் அனைவரும் புதிய வழித்தட பேருந்து வசதியினை முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.

* புதிய பேருந்து வழிதடம் : குன்னம் – சென்னை (வழி – வேப்பூர், ஒகளூர், ஆடுதுறை, லப்பைகுடிகாடு மற்றும் தொழுதூர் வழியாக தினசரி இயக்கப்படுகிறது)
* புதிய பேருந்து வழிதடம் : பெரம்பலூர் – சென்னை (வழி – விழுப்புரம் வழியாக தினசரி இயக்கப்படுகிறது)

Tags : Kunnam ,Perambalur ,Chennai ,Transport Minister ,Sivasankar ,Government Rapid Transport Corporation ,KUNNATH VIA DOHTHUR ,CHENNAH ,VILUPURAM ,
× RELATED மானாமதுரை வாலிபர் மரண வழக்கில்...