- ரயில்வே தொழிற்சங்கம்
- பெரம்பூர்
- நிறுவன நாள்
- SRES
- ரயில்வே
- யூனியன்
- சென்னை
- எம். சூரியா பிரகாஷ்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
பெரம்பூர்: சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஒற்றுமை நிலையத்தில் எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் 107வது ஆண்டு ஸ்தபகர் தின விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அந்த தொழிற்சங்கத்தின் நிர்வாக தலைவர் எம்.சூரிய பிரகாஷ் தலைமை வகித்தார். இதில், ஒன்றிய அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக பெற்று 01-01-2026 முதல் அதனை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.
தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.தனியார் மையம், அவுட்சோர்சிங். ஒப்பந்த முறைகளை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில், பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பார்த்திபன், நிர்வாக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், உதவி பொதுச்செயலாளர் கருணாகரன் கலந்துகொண்டனர்.
