- கோசஸ்தலயத்து
- பொதுக்கோட்டை
- லாமரப்பக்கம் அணை
- கோசாஸ்தலயத்
- பெரியபாலியம்
- தாமரிபாக்கம் ஐகாடு
- மிக்ஜம் புயல்
ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில், கொசஸ்தலையாற்றின் தடுப்பணையின் நடுவில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில், கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக மழை பெய்து ஆறு, ஏரிகளில் நீர் நிரம்பி காணப்பட்டது. இதனால், ஆற்றின் கரை பகுதிகள் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர், படிப்படியாக உயர்த்தி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் கரைகள் இருபுறமும் சேதமடைந்தது. மேலும், தடுப்பணை பகுதியில் கான்கிரிட் சிமெண்ட்டால் போடப்பட்ட தரைப்பகுதி சேதமடைந்து மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு ஆற்றின் கரைகள் மற்றும் தடுப்பணையின் நடுவில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
