- வாக்குக் குழு பயிற்சி மாநாடு
- JolarBetta
- மு. கே. ஸ்டாலின்
- Tirupathur
- திருப்பத்தூர் மாவட்டம்
- ஜோலார்பேட்டை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுகா
- மு
- திமுக வடமண்டல வாக்கெடுப்புக் குழு
- ஸ்டாலின்
- 47
- வேலூர்
- Ranipetta
- சேலம்
- கிருஷ்ணகிரி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு இன்று மாலை நடக்கிறது. இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி உள்பட 47 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1.50 லட்சம் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு 45 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கமும், 160 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி கூட்டத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் விஐபிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. 1.50 லட்சம் முகவர்கள் பங்கேற்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பத்தூருக்கு புறப்பட்டனர். காலை 11 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த முதல்வருக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருப்பத்தூரில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். இதையடுத்து மாலை 4 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டையில் நடைபெறும் ரோடுஷோவில் கலந்து கொண்டு, பொதுமக்களை சந்திக்கிறார். தொடர்ந்து ெபான்னேரி பகுதியில் நடைபெறும் ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார்.
பின்னர் மண்டலவாடியில் நடைபெறும் மாநாட்டு பந்தல் நுழைவாயிலில் இருந்து பேட்டரி கார் மூலம் முதல்வர், மக்களை சந்தித்தபடி மேடைக்கு சென்று சிறப்புரை ஆற்றுகிறார். இதில், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள், டிஜிட்டல் ஏஜென்ட், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் என ெமாத்தம் 1.50லட்சம் பேர் பங்கேற்கின்றனர். முடிவில் மாவட்ட செயலாளர் தேவராஜி எம்எல்ஏ நன்றி கூறுகிறார். இம்மாநாட்டில் உரையாற்றிவிட்டு மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று, ரயில் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்வர் வருகையையொட்டி ஜோலார்பேட்டை ரயில்நிலையம் அருகிலும் மாநாட்டிற்கு செல்லும் வழியில் திமுக கொடி, வாழை மரங்களால் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. 1.50 லட்சம் முகவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தேவையான குடிநீர், தின்பண்டங்கள் அடங்கிய தொகுப்புகள் அவர்களது இருக்கைகளில் வைக்கப்பட்டுள்ளது.
