×

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30,000 கேட்டு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகை, பிப். 3: கனமழையால் சேதமடைந்த நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் கேட்டு நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜனவரி மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்த நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு தமிழக அரசு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி நாகை ஆர்டிஓ அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் அம்பிகாபதி துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தது. எனவே சேதமடைந்த நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு தமிழக அரசு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மானாவாரி பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மற்ற பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை கிடைக்காத விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை முழுவதையும் காலதாமதமின்றி கிடைக்க செய்ய வேண்டும். விவசாயிகள் பயிர் கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Tags : union protests ,
× RELATED புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து ஓய்வூதியர்கள் சங்கம் தர்ணா போராட்டம்