×

அதிமுகவை வழிநடத்த எடப்பாடிக்கு ஆளுமையில்லை: முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் விமர்சனம்

சென்னை: அதிமுகவை வழிநடத்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை என முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள நிலையில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

அதிமுகவின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. கட்சி வளர்ச்சி அடைவதற்கான வேலையைச் சரியான முறையில் அவர்களால் நடத்தமுடியவில்லை. நான் செய்யும் செயலுக்கு அவர்கள் ஒத்துவரவில்லை அதனால் நான் விலகிவிட்டேன். அதிமுக கூட்டணி வலிமையானது என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம்; இதுவரை மக்கள் சொல்லவில்லை.

அதிமுகவை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமை இல்லை; அவரின் செயல்பாடு சரியில்லை. வரும் தேர்தலில் நிச்சயமாக அதிமுக ஜெயிக்காது. நான் தவெகவில் இணைவதற்கு செங்கோட்டையனும் ஒரு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Edappadi ,AIADMK ,AIADMK District ,Chennai ,Former ,V.S. Babu ,Edappadi Palaniswami ,District Secretary ,Thaveka ,
× RELATED மருதூர் சுங்கச்சாவடியில் தேர்தல்...