×

ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

சென்னை :ஒன்றிய அரசை கண்டித்து பிப்ரவரி 12ம் தேதி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இது தொடர்பான அறிவிப்பில், “ஓன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து – தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dima ,EU government ,Chennai ,dimuka ,Union government ,Tamil Nadu ,
× RELATED தரகம்பட்டி, குருணிகுளத்துப்பட்டி...