×

அறுவடை இயந்திரத்திற்கு கூடுதல் வாடகையா? வசூலித்தால் புகார் அளிக்கலாம்

விருதுநகர், பிப். 3: விருதுநகர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராஜ் தகவல்: அரசின் அனைத்து நெல் அறுவடை இயந்திரங்களும் டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணியில் உள்ளன. இதனால் தனியார் நெல் அறுவடை  இயந்திரங்களை உபயோகிக்கும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் பொறியியல் துறை மானியத்தில் வழங்கப்பட்ட தனியார் பெல்ட் டைப் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு வாடகை ரூ.2,150, டயர் டைப் இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூ.1,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் வாடகை வசூலித்தால் வேளாண் பொறியியல் துறையில் புகார் அளிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள்...