×

10 ஆண்டுகளில் ரயில்வே நிதி நிலைமை மேம்பட்டுள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினரின் கேள்விகளுக்கு பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ்,பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயின் நிதி நிலைமையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும், பயணிகள் வருவாயை அதிகரிக்கவும், செலவைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில்வேயில் பணியாற்றும் 12 லட்சம் ஊழியர்களுக்கு சுமார் ரூ.1.18 லட்சம் கோடி, 18 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.65,000 கோடி செலவு. எரிசக்தி செலவு ரூ.32,000 கோடி, நிதி செலவு ரூ.23,000 கோடி மற்றும் பராமரிப்பு செலவு ரூ.8,000 கோடி ஆகும். ரயில்வேயின் ஒட்டுமொத்த செலவு சுமார் ரூ.2.74 லட்சம் கோடி. 10 ஆண்டுகளில் அரசு எடுத்த நடவடிக்கைகளால், ரயில்வே அதன் அனைத்து செலவுகளையும் சந்தித்த பிறகு ஒரு சிறிய உபரியை ஈட்டுகிறது என்றார்.

Tags : Railway Minister ,Ashwini Vaishnav ,New Delhi ,Rajya Sabha ,Modi ,
× RELATED நீட்-பிஜி கட் ஆப் மதிப்பெண் குறைப்பு...