×

பாகிஸ்தான் எல்லையில் அமித் ஷா ஆய்வு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ஒன்றிய அமைச்சர் அமித் ஷா எல்லையில் பாதுகாப்பு குறித்து நேற்று ஆய்வு செய்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் நேற்றுமுன்தினம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கதுவா மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியான ஹிராநகரின் குர்னாம் மற்றும் போபியான் பகுதிக்கு சென்ற அமித் ஷா, அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாடி, எல்லை பாதுகாப்பு நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் போபியானில் எல்லை காவல் வீரர்களுக்கான 6 நலத்திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கதுவாவின் சர்வதேச எல்லையில் உள்ள முன்னோக்கி நிலைகளில் அமித் ஷா ஆய்வு செய்தார். மேலும், எல்லை பகுதியில் உள்ள கண்காணிப்பு கருவிகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : Amit Shah ,Pakistan ,Jammu ,Union Minister ,Jammu and ,Kashmir ,Union Interior Minister ,Kaduwa district ,
× RELATED குறுகிய கால வட்டி விகிதத்தில்...