- அஇஅதிமுக
- அன்புமணி
- பா.ம.க.
- டிடிவி தினகரன் அமமுக
- ஜி.கே.
- வாசன் தமகா
- பாஜக
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- ராஜ்ய சபா
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணியில் அன்புமணி (பாமக), டிடிவி தினகரன் அமமுக, ஜி.கே.வாசன் தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கட்சிகள் அதிமுக தலைமையில் இணையும் போது, தங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை சீட் வேண்டும் என கோரிக்கை வைத்திருக்காங்க. வேறு வழியின்றி, அதிமுக தலைமையும் கிரீன் சிக்னல் காட்டியிருக்கு.
ஆனால், அதிமுக வசம் 2 மாநிலங்களவை சீட் தான் உள்ளது. இதில் இரண்டையும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விட்டால், நாம் என்ன செய்வது என அதிமுக தலைமை தீவிர ஆலோசனையில் இருக்குதாம். இரண்டையும் கூட்டணிக்கு கொடுத்து விட்டால் கட்சியில் பெரிய அளவில் சலசலப்பு ஏற்படலாம். இதை சரிக்கட்ட கடைசி நேரத்தில் பாஜ பக்கம் கூட்டணி கட்சிகளை கை காட்டி விடலாம். தேர்தல் முடிந்து ரிசல்டுக்கு பின்னர் இந்த விஷயத்தை கூட்டணி கட்சிகளிடம் கூறிக்கொள்ளலாம் என அதிமுக தலைமை முடிவு செய்திருக்காம்.
