சென்னை: தமிழகம் முழுவதும் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 ஏஎஸ்பிக்கள் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உதவி எஸ்பியாக இருந்த அங்கித் சிங் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராகவும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உதவி எஸ்பியாக இருந்த சிருஷ்டி சிங் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி திருச்சி மாநகர தெற்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் செயலராக இருந்த ஐஜி ராஜேஸ்வரி சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாகவும், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த கயல்விழி தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ரம்யா பாரதி குற்றப்பிரிவு ஐஜியாகவும், சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த சிவராமன் வேலூர் மாவட்ட எஸ்பியாகவும், வேலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த மயில்வாகனன் லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு மண்டல எஸ்பியாகவும், திருச்சி மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த டி.ஈஸ்வரன் ஆவடி மாநகர போக்குவரத்து துணை கமிஷனராகவும்,
சென்னை ரயில்வே எஸ்பியாக இருந்த ஐ.ஈஸ்வரன் அண்ணாநகர துணை கமிஷனராகவும், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக இருந்த உதயகுமார் கோயம்பேடு துணை கமிஷனராகவும், சென்னை கோயம்பேடு துணை கமிஷனராக இருந்த சுஜித்குமார் சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும்,
சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த சுகாசினி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்பியாகவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் எஸ்பியாக இருந்த நாகஜோதி சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
