×

தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களுக்கு தீர்வு காண வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் நடத்தும் போராட்டத்தை முக்கிய கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி செய்வது முறையல்ல.போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டுமே தவிர போராட்டக்காரர்களை கைது செய்யும் அடக்கு முறை நியாயமில்லை. போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன்.

Tags : Vasan ,Tamil Nadu ,Chennai ,TAMAK ,G.K. Vasan ,TASMAC ,
× RELATED மானாமதுரை அருகே தீத்தான்பேட்டை...