×

திருச்செந்தூர் முருகனை வழிபட்டு முதல்வரை சந்திக்கிறாரா ஓபிஎஸ்?

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகனை வழிபட்டதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்திக்கிறாரா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2 நாள் வழிபாடு செய்தார் ஓபிஎஸ். அப்போது திருச்செந்தூரில் உள்ள தனியார் கடற்கரை ரிசார்ட்டில் இரண்டு மூன்று அறைகளை முன் பதிவு செய்து தன் ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ்சின் நெருங்கிய வட்டாரங்கள் அவர் முருகனை வழிபட்டு விட்டு நல்ல முடிவு எடுப்பதற்காக தான் திருச்செந்தூர் வந்து தங்கி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். இதையடுத்து இபிஎஸ்-க்கு எதிராக களம் இறங்குவதற்காக அவர் முதல்வரை நேரில் சந்தித்துப் பேசுவார். தொகுதி வளர்ச்சிக்கான சந்திப்பு என்று கூறி கூட அவர் முதல்வரை நேரில் சந்திப்பார் என கூறுகின்றனர்.

Tags : TRICHENDUR ,MURUGAN ,PRIME ,OPS ,Thiruchendur ,Tiruchendur Murugan ,Chief Minister ,K. ,Stalin ,SUPRAMANIYA SWAMI TEMPLE ,Tricendur ,
× RELATED தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப்...