×

அதிமுகவைப் போல நாங்களும் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்: சொல்கிறார் நயினார்

 

சிவகங்கை: பாஜவும் கொள்கை அடிப்படையில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில், இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. நேற்று இக்கோயிலுக்கு வந்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜ இந்தியை திணிக்கவும் இல்லை. இந்தியை கையில் எடுக்கவும் இல்லை. அதிமுக தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது. பாஜவும் கொள்கை அடிப்படையில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடும். இறுதியில் இருவருக்கும் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

விஜய் மீது பாய்ச்சல்
மதுரையில் நேற்று பேட்டியளித்த நயினார், அதிமுகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது. இன்னும் விசிலை வைத்து அடித்துக்கொண்டு இருந்தால் ஒண்ணும் நடக்காது’’ என்றார்.

Tags : Atymuga ,Nayanar ,Sivaganga ,Nayinar Nagendran ,Akkatsi ,BJP ,Thirukoshtiur Soumiya Narayana Perumal Temple ,Thiruputhur, Sivaganga District ,Maha Kumbabhishek Ceremony ,
× RELATED திருச்செந்தூர் முருகனை வழிபட்டு முதல்வரை சந்திக்கிறாரா ஓபிஎஸ்?