- குளித்தலை மாரியம்மன் கோவில் பள்ளி
- நகராட்சி மன்றம்
- குலிதலை
- குளித்தலை நகராட்சி மாரியம்மன் கோயில் பள்ளி
- பரதநாட்டியம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
*நகர்மன்ற தலைவர் பாராட்டு
குளித்தலை : மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி, பரதநாட்டிய பிரிவில் குளித்தலை நகராட்சி மாரியம்மன் கோயில் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து அசத்தியதை தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் பாராட்டினார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் கல்வி பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளி கொணரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின் பேரில் கலை திருவிழா வட்டார அளவில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த ஒரு மாத காலமாக அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் கரூர் மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான போட்டிக்கு குளித்தலை நகராட்சி மாரியம்மன் கோவில் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் சிறப்பாக நடனமாடி முதலிடத்தை பெற்றனர்.
வெற்றி பெற்ற குளித்தலை நகராட்சி மாரியம்மன் கோவில் பள்ளி மாணவிகளுக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கேடயம் மற்றும் சான்றிதழ்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டியில் முதலிடம். நாட்டுப்புற நடனம் தனி போட்டியில் முதலிடம்.
தனிநபர் நடிப்பு முதலிடம். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பரதநாட்டியம் போட்டி முதலிடம். வில்லுப்பாட்டு போட்டி முதலிடம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கிராமிய நடனம் இரண்டாம் இடம். பல குரல் பேச்சுப்போட்டி மூன்றாம் இடம் பெற்று மாரியம்மன் கோவில் பள்ளி மாணவிகள் அசத்தி உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா நகராட்சி மாரியம்மன் கோவில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ராஜ் தலைமை வகித்தார். பட்டாதாரி ஆசிரியர் கண்மணி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, வட்டார கல்வி அலுவலர் மணிமாலா ஆகியோர் கலைத் திருவிழாவில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சௌந்தரவல்லி, ஆசிரியர் பயிற்றுனர் இந்திரா மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் இந்திராணி நன்றி கூறினார்.
