பெங்களூரு: பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
