- மகளிர் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி ஆர்.சி.பி.
- வதோதரா
- ராயல் சேலஞ்சர்ஸ்
- பெங்களூர்
- தில்லி தலைநகரம்
- பெண்கள் பிரீமியர் லீக்
- WPL
- வதோதரா, குஜராத்
வதோதரா: மகளிர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. குஜராத்தின் வதோதராவில் நேற்று நடந்த மகளிர் பிரிமியர் லீக் (டபிள்யுபிஎல்) இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் லிஸெல் லீ (37), ஷபாலி வர்மா (20) நல்ல தொடக்கத்தை தந்தனர்.
அதிரடியாக ஆடிய லாரா உல்வார்ட் 25 பந்தில் 44 ரன்னும், கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்தில் 57 ரன்னும் விளாசினர். டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. இறுதி ஓவர்களில் பந்தை பறக்க விட்ட சினெல்லி ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீராங்கனை ஹாரிஸ் 9 ரன்னில் வெளியேறினார். ஆனாலும் கேப்டன் மந்தனா, ஜார்ஜியா வால் அட்டகாசமாக அடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்த நிலையில் மந்தனா (87 ரன், 41 பந்து, 3 சிக்ஸ், 12 பவுண்டரி), ஜார்ஜியா (79 ரன், 54 பந்து) ஆட்டமிழந்தனர். ஆர்சிபி அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
