×

பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா!

 

டெல்லி: பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சுக்கு மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றுகையில்; நான்தான் பிரதமர் மோடியை அவைக்கு இன்று வர வேண்டாம் என கேட்டுக்கொண்டேன்.

பதில் சொல்ல பயந்து பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை என ராகுல் குற்றம்சாட்டியிருந்தார். காங். உறுப்பினர்கள் பிரதமர் இருக்கை அருகே முற்றுகையிட திட்டமிட்டிருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. அதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருந்தால் இந்தியாவின் ஜனநாயக மாண்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மக்களவையில் நேற்று சில உறுப்பினர்கள் வழக்கத்திற்கு மாறாக நடந்துகொண்டனர்.

பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று நான்தான் கூறினேன். பிரதமர் பதில் சொல்லும்போது அவரது இருக்கை அருகில் விரும்பத்தகாத செயலில் ஈடுபட காங். எம்.பி.க்கள் திட்டம். எதிர்க்கட்சிகளின் செயலை தவிர்க்கவே நான் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். இதுவரை இல்லாத வகையில் பிரதமரை முற்றுகையிட காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்தனர். ஜோதிமணி, சுதா உள்ளிட்ட 6 காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமரை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு உரையாற்றினார்.

 

Tags : Modi ,Lok Sabha ,Speaker ,Om Birla ,Delhi ,MPs ,
× RELATED சென்னை உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு...