×

தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை புதிய இணையதளம் வாயிலாக பதியலாம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம், ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் இருந்து கருத்துகளை பெறுவதற்காக, இளைஞர் கனவு இணையதளம் (Youth Dream Portal) தொடங்கப்படுகிறது.

இளைஞர்கள் enkanavu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும் கனவுகளின் அடிப்படையில், 2030ம் ஆண்டு தங்களது லட்சிய கனவுகளை திட்டமிட்டு அடைந்திட உதவிடும் வகையில், இளைஞர் நலனிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவர்களின் எதிர்கால கனவுகள் நிறைவேற்றப்படும். ‘என் கனவு என் எதிர்காலம்’ என்ற இப்புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

Tags : Tamil Nadu ,Sports Development Authority ,Chennai ,Tamil Nadu Sports Development Authority ,Youth Welfare and Sports Development Department ,
× RELATED வெங்காய லோடு பிடித்த பறக்கும் படை;...