×

டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிப்.11ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் நிறுவனத்தில் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்வது, போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் வரும் 11ம் தேதி புதன் கிழமை காலை 10 மணியளவில், அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Adimuka ,Tasmak ,Edappadi Palanisami ,Chennai ,General Secretary ,Tamil Nadu ,
× RELATED இந்திய துணை தேர்தல் ஆணையர் பிப், 11ல் தமிழ்நாடு வருகை