×

கட்சித் தலைவருக்கான தகுதியை விஜய் வளர்த்துக் கொள்ள வேண்டும்: நயினார் அட்வைஸ்

 

சேலம்: ஒரு கட்சி தலைவராக இருந்துக்கொண்டு, கட்சியினுடைய ஆண்டு விழாவில் ஆடுறது தான் விஜய்யின் கொள்கை என பாஜ தலைவர் சாடி உள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாயிருக்கிறது. அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியதற்கு உட்கட்சி பூசல் ஒன்றும் இல்லை. அவருடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அடுத்த முறை நான் எல்லா நிகழ்ச்சிக்கும் போறேன்னு சொன்னாரு. இது ஒரு சின்ன விஷயம்.

நடிகர் விஜய் சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். மக்களுக்கான தலைவர் என்றால் அதுக்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு கட்சி தலைவராக இருந்துகொண்டு, கட்சியினுடைய ஆண்டு விழாவில் ஆடுறது தான் அவரோடு கொள்கை. இவங்க எல்லாம் நாளைக்கு மக்களுக்காக என்ன செய்ய முடியும். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,Nainar ,Salem ,BJP ,president ,Nainar Nagendran ,National Democratic Alliance government… ,
× RELATED அதிமுகவில் தேர்தல் வியாபாரம்; எம்எல்ஏ...