×

அதிமுகவில் தேர்தல் வியாபாரம்; எம்எல்ஏ சீட் வேணுமா… ரூ.15 கோடியை காட்டுங்க… விருப்ப மனு செய்தவர்கள் குய்யோ… முய்யோ…

 

சீட்டு வேணும் என்பவர்கள் ரூ.15 கோடியை கண்ணில் காட்டுங்கள். அவர்களுக்கு நிச்சயம் சீட்டு கொடுப்போம்.

விழுப்புரம்: தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் கூட்டணியில் சேர்ந்துள்ள பாஜ அதிக தொகுதிகளையும், தாங்கள் விரும்பும் தொகுதிகளையும் கொடுத்தாக வேண்டுமென்று குடைச்சல் கொடுத்து வருவதால் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளும் தங்கள் ெதாகுதியை பிடித்துக் கொள்வதற்கான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மற்ற தொகுதிகளிலும் அதிமுகவில் போட்டியிடுபவர்கள் அங்குள்ள மாஜி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.

அதன்படி விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தோல்வியடைந்ததால் இந்தமுறை மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார். இதனால் அதிமுகவில் காலியாக உள்ள விழுப்புரம் தொகுதியில் போட்டியிட 20க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு தாக்கல் செய்திருக்கின்றனர். சீட்டுக்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது சகோதரரை சுற்றிவலம் வந்து கொண்டிருக்கிறார்களாம். இதனை அறிந்த மாஜி அமைச்சரும், அவரது சகோதருரம் சீட்டு கேட்டவர்களை கட்சி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, ‘நம்ம கட்சி முன்னமாதரி இல்ல. தேர்தல் செலவுக்கு கொட்டிக் கொடுக்கும் என்றெல்லாம் நம்பியிருக்காதீங்க. விழுப்புரம் தொகுதியில் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

சீட்டு வேணும் என்பவர்கள் ரூ.15 கோடியை கண்ணில் காட்டுங்கள். அவர்களுக்கு சீட்டு நிச்சயம் கொடுப்போம். இல்லையென்றால் நாங்கள் செலவு செய்யும் ஒரு வேட்பாளரை தேர்வு செய்து வைத்திருக்கிறோம்’ என்று ஓப்பன் டாக்காக பேசி இருக்கிறார்களாம். ரூ.5 கோடின்னா பரவாயில்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வதென்று விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் பலரும் குய்யோ முய்யோ என்று மனதுக்குள் குமைகிறார்களாம். ஜெயலலிதா இருக்கும்போது தேர்தலில் சீட் கிடைச்சாலே போதும். ஆனால் இன்று பணத்தை கண்ணில் காட்டினால்தான் சீட்டு கொடுப்பேன் என்று தேர்தலை கட்சியில் வியாபாரமாக்கி விட்டார்களே என்று புலம்புகிறார்களாம்.

Tags : Atamugwal ,MLA ,Venuma ,Guyo ,Muyyo ,Viluppuram ,Tamil Nadu ,
× RELATED டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை...