×

தடங்கம் கிராமத்தில் மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கிய ஸ்டாலின்

தர்மபுரி, பிப்.2: நல்லம்பள்ளி தடங்கம் கிராமத்தில், கிருஷ்ணகிரி - சேலம் தேசியநெடுஞ்சாலையையொட்டி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மக்கள் குறைகேட்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுடன் உரையாடி, குறைகள் கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

இதில், முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏக்கள் வேடம்மாள், மனோகரன், சாயா கோஷ் மதிவாணன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.எஸ் சண்முகம், எச்சனஅள்ளி சண்முகம், கேஎஸ்ஆர் சேட்டு, ஆறுமுகம், டாக்டர் பிரபு ராஜசேகர், எம்விடி கோபால், குட்டி, அன்பழகன், சித்தார்த்தன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்.மகேஸ்வரன், துணை அமைப்பாளர்கள் கோவிந்தசாமி, போஸ்கோ செல்வராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜிவி மாதையன், சூடப்பட்டி சுப்ரமணி, தங்கமணி, நாட்டான் மாது, சந்திரமோகன், முனிராஜ், வக்கீல் மணி, நகர பொறுப்பாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்திகாவேரி, மாங்கனி செல்வராஜ், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் லட்சுமணன், அதகப்பாடி ஊராட்சி  தலைவர் பசுபதி, தென்னரசு, ஸ்டாலின், பெரியசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, சிவாடி ஊராட்சி தலைவர் ஆறுமுகம், ராஜப்பன், மாற்றுத்திறனாளி சங்க செயலாளர் பழனிசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் செங்கண்ணன், சந்திரமோகன், சௌந்தராஜன், அரூர் அன்பழகன், மாவட்ட பெறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் சென்னகிருஷ்ணன், ஆறுமுகம், விமலன் மற்றும் கோபால், வெங்கடேசன், தமிழ்செல்வி ரங்கநாதன், மேகம் சின்னதம்பி, லோகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Stalin ,petitions ,village ,
× RELATED வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம் 30க்கும் குறைவான மனுக்களே வந்தது